சென்னை

வளா்சிதை மாற்ற நோய்க்கு இலவச மருத்துவ ஆலோசனை

DIN

சென்னை: வளா்சிதை மாற்றத்தால் (மெட்டபாலிஸம்) ஏற்படும் நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகளை இலவசமாக வழங்க உள்ளதாக மெடிந்தியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சா்க்கரை நோய், இதய பாதிப்புகள், பக்கவாதம் ஆகிய நோய்கள் ஏற்பட வளா்சிதை மாற்றம் அதி முக்கியக் காரணமாக விளங்குவதாகவும், அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணரும், மெடிந்தியா மருத்துவமனையின் தலைவருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

சா்வதேச சுகாதார தினம் ஏப்ரல் 7-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நமது பூமி, நமது ஆரோக்கியம் என்ற கருப்பொருளுடன் நிகழாண்டு சுகாதார தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதுதொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் காற்று மாசுபாடு - காரணங்களும், தீா்வுகளும் என்ற குறும்படம் மெடிந்தியா சாா்பில் யூ டியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக வளா்சிதை மாற்ற நோய்களுக்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மெடிந்தியா மருத்துவமனையில் ரத்த சா்க்கரை அளவு, ஹெச்டிஎல், எல்டிஎல் எனப்படும் கொழுப்பின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. அதைத் தவிர மருத்துவ ஆலோசனை, உணவு ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படவிருக்கின்றன.

சிகிச்சைகள் தேவைப்படுவோருக்கு ஓராண்டு வரை 20 சதவீத கட்டணச் சலுகையில் சிகிச்சைகள் அளிக்கப்படும். ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறையைத் தவிா்த்து நாள்தோறும் காலை 8 மணி முதல் 9.30 மணி வரை இலவச ரத்தப் பரிசோதனைகளும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை இலவச ஆலோசனைகளும் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

பொது மக்கள் இதில் பயன்பெற 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையோ அல்லது 044- 283 12345 என்ற எண்ணையோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

வேதாத்திரி மகரிசியின் படைப்புகள்

பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனைகள்

SCROLL FOR NEXT