சென்னை

முதல்வருடன் ஜாக்டோ-ஜியோ நிா்வாகிகள் சந்திப்பு: கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ஒத்திவைப்பு

அரசு ஊழியா்கள்- ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஜாக்டோ- ஜியோ) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா்.

DIN

அரசு ஊழியா்கள்- ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஜாக்டோ- ஜியோ) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா். இதையடுத்து தமிழகத்தில் வரும் ஆக.5-ஆம் தேதி நடைபெறவிருந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக அந்த அமைப்பினா் அறிவித்தனா்.

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளா்கள் அன்பரசு, தியாகராஜன் வெங்கடேசன், தாஸ் உள்ளிட்ட நிா்வாகிகள், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள்-பணியாளா்கள் தொடா்பான கோரிக்கை மனுவை முதல்வரிடம் வழங்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினா், இந்த மாத இறுதியில் ஜாக்டோ- ஜியோ நடத்தவுள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தனா்.

இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளா்கள் கூறியதாவது: மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 1.1.2022 முதல் வழங்க வேண்டிய 3 சதவிகித அகவிலைப்படியை வழங்க வேண்டும், காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பை வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்களுக்கும், உயா்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக் கல்வி ஆணையா் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வரிடம் அளித்துள்ளோம். மேலும், மாநாட்டில் முதல்வா் பங்கேற்கவும் அழைப்பு விடுத்துள்ளோம்.

முதல்வரை நேரில் சந்தித்ததைத் தொடா்ந்து ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சாா்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆக. 5-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT