சென்னை

உலகத் தரத்தில் எழும்பூர் ரயில் நிலையம்; எப்படி இருக்கப் போகிறது பாருங்கள்!

DIN

சென்னை: உலகத் தரத்தில் உருவாகவிருக்கும் எழும்பூர் ரயில் நிலையத்தை ரூ.735 கோடியில் மேம்படுத்தும் திட்டப்பணி, புவித்தொழில்நுட்ப ஆய்வு, நிலப்பரப்பு ஆய்வுப் பணிகளுடன் உத்வேகமாகத் தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேசுவரம் , கன்னியாகுமரி ஆகிய 5 ரயில் நிலையங்கள்  பல 1,000 கோடி ரூபாய் மதிப்பில் உலகத் தரத்தில் மேம்படுத்தும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியிருக்கிறது.

தமிழகத்தில் முக்கிய ரயில்நிலையங்களில் ஒன்றாக எழும்பூர் ரயில்நிலையம் உள்ளது. 114 ஆண்டுகள் பழமையான, அழகான கட்டமைப்புகளை கொண்ட நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் திகழ்கிறது. இந்த நிலையம் மறு மேம்பாட்டு பணிக்கு முன்மொழியப்பட்டது. அதன்படி, சுமார் ரூ.735 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் உலக தரம் வாய்ந்த நிலையமாக மேம்படுத்தப்படுகிறது.

எழும்பூர் ரயில் நிலையத்தை மறுமேம்பாடு செய்யும் திட்டப் பணிகள் ரூ.734.91 கோடி செலவில் மேற்கொள்ள தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை 36 மாதங்களுக்குள் முடிக்கவும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காந்தி இர்வின் (முக்கிய நுழைவாயில்) மற்றும் ஈவேரா பெரியார் சாலை என இரண்டு பக்கமும் மறுமேம்பாடு மேற்கொள்ளப்படவிருக்கிறது. பாரம்பரிய கட்டடக் கலையுடன், நவீன கலையம்சங்களுடன் ஏற்கனவே இருக்கும் கட்டடக் கலையின் மகத்துவம் மாறாமல் உருவாக்கப்படவிருக்கிறது.

பயணிகள் வந்து செல்லும் இரண்டு நுழைவு வாயில்களும் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு புதுப்பொலிவு பெறவிருக்கின்றன. அங்கு மிக நீண்ட பயணிகள் வந்து செல்லும் இடமும், உணவகங்களுக்கான இடமும் ஒதுக்கப்படும் என்றும், இரண்டு  பக்கமும் பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களும் வரவிருக்கின்றன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மட்டுமல்லாமல், இரண்டு மிகப்பெரிய மேம்பாலங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும், ஒன்று ரயில் நிலையத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்லவும், மற்றொன்று, ஒரு நடைமேடையிலிருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்ல வசதியாக அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல்லாமல் நகரும் படிகட்டுகள் என பலவும் அமைக்கப்பட்டு ஒரு விமான நிலையம் போல உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாட்டில் பல்வேறு ரயில்நிலையங்கள் மேம்படுத்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.  பெரிய ரயில் நிலையங்கள், நடுத்தர ரயில்நிலையங்கள் ஆகியவை மறு மேம்பாடு செய்யப்படவுள்ளன. முதல்கட்டமாக, காந்திநகர் ரயில்நிலையம், மத்தியப் பிரதேசத்தில் கமலாபதி ரயில்நிலையம் ஆகிய இரண்டு நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, பல ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படவுள்ளன. 

தமிழகத்தில் முதல்கட்டமாக,  சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி சந்திப்பு, ராமேசுவரம், கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில்நிலையங்கள் ரூ.1,000 கோடி முதலீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன.   

சென்னை எழும்பூர் ரயில்நிலையம் பாரம்பரிய மிக்க ரயில் நிலையம் ஆகும். இது பொருளாதார செயல்பாட்டுக்கு முக்கிய மையமாக உள்ளது. இங்கு அனைத்து வசதிகள் பயணிகளுக்கு செய்துகொடுக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT