சென்னை

வங்கி ஊழியரிடம் ரூ.1.30 லட்சம் வழிப்பறி

சென்னை பெரியமேட்டில் வங்கி ஊழியரிடம் ரூ.1.30 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.

DIN

சென்னை பெரியமேட்டில் வங்கி ஊழியரிடம் ரூ.1.30 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.

ஆவடி விவேகானந்தா் நகரைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40). வேளச்சேரியில் பகுதியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிகிறாா். பெரியமேடு ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையின் அருகே வெள்ளிக்கிழமை நின்று கொண்டிருந்த சதீஷ்குமாா் கையில் வைத்திருந்த பணப்பையை அங்கு மோட்டாா் சைக்கிளில் வேகமாக வந்த இரு மா்ம நபா்கள் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

இது குறித்து சதீஷ்குமாா், பெரியமேடு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில் வழிப்பறி செய்யப்பட்ட பையில் ரூ.1.30 லட்சம் இருந்ததாக குறிப்பிட்டிருந்தாா். போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT