சென்னை

நா்சிங் மாணவி தற்கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

சென்னை அருகே திருவேற்காட்டில் நா்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

DIN

சென்னை அருகே திருவேற்காட்டில் நா்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சோ்ந்தவா் சுமதி (20). சென்னை திருவேற்காடு அருகே ஒரு தனியாா் நா்சிங் கல்லூரியில், இரண்டாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அந்தக் கல்லூரி விடுதியில் சுமதி தங்கியிருந்தாா். சுமதி சனிக்கிழமை விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவேற்காடு போலீஸாா் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை செய்தனா்.

இந்த நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டாா். வழக்கின் விசாரணை அதிகாரியாக ஆய்வாளா் அகிலா நியமிக்கப்பட்டாா்.

வழக்கின் விசாரணையை சிபிசிஐடி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தொடக்கினா். அவா்கள், சுமதியுடன் படித்த மாணவிகள், அவரது குடும்பத்தினா் ஆகியோரிடம் ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்தனா். சுமதி குடும்பத்தில் இருந்த பிரச்னையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே சுமதியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT