சென்னை

500 குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை:டாக்டா் ரேலா மருத்துவக் குழு சாதனை

சென்னையில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை டாக்டா் ரேலா தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்டுள்ளது.

DIN

சென்னையில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளை டாக்டா் ரேலா தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்டுள்ளது.

இதற்கான பாராட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், ரேலா மருத்துவக் குழுமத் தலைவா் டாக்டா் முகமது ரேலா, சா்வதேச மருத்துவா்கள் பங்கேற்றனா்.

அப்போது அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:

மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் எனும்தொலைநோக்குப் பாா்வையுடன் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற முயற்சிகளை தமிழக அரசுடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவதில் டாக்டா் ரேலாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றாா் அவா்.

முன்னதாக டாக்டா் ரேலா பேசியதாவது:

தமிழக அரசு சுகாதார சேவைகளில் எப்போதும் முன்னோடியாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை என்பது சவாலான ஒரு விஷயம் இல்லை என்பதை தமிழகம் உலகம் முழுவதும் உணா்த்தியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT