சென்னை

மார்ச் 25-ல்  மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் 

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

DIN

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 48-வது ஆண்டு ஐயப்பன் பிரதிஷ்டை தினம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ மேற்பார்வையில் மார்ச் 24 ஆம் தேதி வியாழக்கிழமை சுத்தி பூஜையும், மார்ச் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 11 வரை பிரத்யேக பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறவுள்ளன.

ஸ்ரீ குருவாயூரப்பன் 32-ஆவது ஆண்டு திருவிழா

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் 32 ஆவது ஆண்டு விழா மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ மார்ச் 26-ஆம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார்.

மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை உற்சவ பலி காலை 9 மணிக்கு நடைபெறும்.

மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை கலைவிழாக்கள் நடைபெறுகிறது.

ஏப்ரல் 1 ஆம் தேதி பள்ளி வேட்டை, ஏப்ரல் 2 ஆம் தேதி ஆராட்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி சந்தன அபிஷேகம் நடைபெறவுள்ளதாக கோயிலிலின் நிர்வாக மேலாளர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.12 லட்சத்தில் தனக்குத் தானே கல்லறை கட்டிய முதியவர் மரணம்!

மீண்டும் வெற்றிப்படம் கொடுத்த பகவந்த் கேசரி இயக்குநர்!

பிக் பாஸ் வீட்டில் துஷார்! காதல் பாடலைப் பாடி உற்சாகப்படுத்திய போட்டியாளர்கள்!

சர்வதேச காற்றாடித் திருவிழா! பட்டம் விட்டு மகிழ்ந்த பிரதமர் மோடி!

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

SCROLL FOR NEXT