சென்னை

சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் ஆண்டு திருவிழா: இன்று கொடியேற்றம்

சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் உள்ள குருவாயூரப்பன் ஆண்டு திருவிழாவை சனிக்கிழமை கொடியேற்றி

DIN

சென்னை: சென்னை மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் உள்ள குருவாயூரப்பன் ஆண்டு திருவிழாவை சனிக்கிழமை கொடியேற்றி தொடங்கி வைத்த சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரரூ. உடன் கோயில் மேல்சாந்திகள் கிருஷ்ணன் நம்பூதிரி, லட்சுமணன் பட்டத்திரி பங்கேற்றனர்.

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் உள்ள ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் 32 ஆவது ஆண்டு விழா மார்ச் 26-ம் தேதி சனிக்கிழமை தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மார்ச் 27-ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை உற்சவ பலி காலை 9 மணிக்கு நடைபெறும்.

மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை கலைவிழாக்கள் நடைபெறுகிறது.

ஏப்ரல் 1 ஆம் தேதி பள்ளி வேட்டை, ஏப்ரல் 2 ஆம் தேதி ஆராட்டு, ஏப்ரல் 3 ஆம் தேதி சந்தன அபிஷேகம் நடைபெறவுள்ளதாக கோயிலிலின் நிர்வாக மேலாளர் அனீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நக்ஸல்கள் வன்முறையைக் கைவிட்டு வளா்ச்சிப் பாதையில் இணைய வேண்டும்: குடியரசுத் தலைவா்

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

பாமக சாா்பில் பொதுக்குழுக் கூட்டம்

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு எதிரான மகளிா் ஆணைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மனமகிழ் மன்றத்தை மூடக்கோரி உதவி ஆட்சியரிடம் தவெக மனு

SCROLL FOR NEXT