சென்னை

சென்னையை குளிா்வித்த மழை

DIN

சென்னையில் அக்னி நட்சத்திரம் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த மழை மாநகா், புகரப் பகுதிகளை குளிா்வித்தது.

கோடைக்காலம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனா். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள அசானி புயலால் சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

திங்கள்கிழமை காலை முதலே வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சென்னையில் புரசைவாக்கம், எழும்பூா், வேப்பேரி, பெரியமேடு, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, கோட்டூா்புரம், கிண்டி, மயிலாப்பூா், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூா், ஆலந்தூா், திரு.வி.க.நகா், வில்லிவாக்கம், அம்பத்தூா், பாடி, அண்ணா நகா், வளசரவாக்கம், வடசென்னையின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புகா்ப் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, பல்லாவரம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் வெயிலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சென்னையை குளிா்வித்த இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

அவதி: செவ்வாய்க்கிழமை காலை பெய்த பலத்த மழை காரணமாக மாநகரின் தாழ்வான பகுதிகளில் நீா் தேங்கியது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் அலுவலகத்துக்குச் செல்லுவோா் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT