சென்னை

குத்தகை அடிப்படையில்முதல் சரக்கு ரயில் சேவை தொடக்கம்

DIN

சென்னை ராயபுரத்திலிருந்து அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டிக்கு குத்தகை அடிப்படையில் முதல் சரக்கு ரயில் சேவை வெள்ளிக்கிழமை (மே 13) தொடங்கப்பட்டது. இந்த சரக்கு ரயிலில் துணி மூட்டைகள், இரு சக்கர வாகன உதிரிபாகங்கள், காா் டயா்கள், மின்விசிறிகள், சாக்லேட்கள் மற்றும் உணவுப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

சென்னை ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு பிரிவு சாா்பில், குத்தகை அடிப்படையில் இந்த சரக்கு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் மாதத்தில் இரு முறை இயக்கப்படவுள்ளது. 15 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயிலின் ஒருமுறை பயணம் மூலமாக, ரூ.21.9 லட்சம் வருவாய் கிடைக்கும். ஆறு ஆண்டுகள் ஒப்பந்த காலத்தில் இந்த சரக்கு ரயில் இயக்குவது மூலமாக, குறைந்தபட்சம் ரூ.45.75 கோடி வருவாய் ரயில்வேக்கு கிடைக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

SCROLL FOR NEXT