சென்னை

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

DIN

சென்னை: பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்ததையடுத்து, நாடு முழுவதும் அதன் விலை லிட்டருக்கு முறையே சுமாா் ரூ.9-யும், ரூ.7-யும் குறைந்துள்ளது.

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் நோக்கில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8-யும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.6-யும் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

சென்னையில் குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு விலை ரூ.94.24-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்!

SCROLL FOR NEXT