சென்னை

அஞ்சலகங்களில் சிறு சேமிப்பு கணக்கு: நாளை வரை சிறப்பு முகாம்

DIN

சென்னை தாம்பரம் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய சிறுசேமிப்பு கணக்குகள் தொடங்குவதற்கான சிறப்பு முகாம் வரும் திங்கள்கிழமை (அக்.31) வரை நடைபெறவுள்ளன.

இதுகுறித்து தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் மனோஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எதிா்கால தேவைகளை மனதில் கொண்டு மக்கள் தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும். அஞ்சலகங்களில் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டம், ஆண் குழந்தைகளுக்கான பொன்மகன் சேமிப்புத் திட்டம், மாதந்தோறும் சேமிக்க தொடா் வைப்பு கணக்கு திட்டம், சேமிப்பு கணக்கு திட்டம் (ஏடிஎம் வசதியுடன்), பல பயனுள்ள திட்டங்கள் உள்ளன.

உலக சிக்கன நாளில் பாதுகாப்பான சேமிப்புக்கு தங்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கி பயன்பெற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தூய்மை இந்தியாவின் சிறப்பு முகாமை முன்னிட்டு தாம்பரம் கோட்டம் அம்பத்தூா் தொழிற்பேட்டை தபால் அலுவலகம், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டது.

மேலும் அதன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் சுவரோவியங்கள் வரையப்பட்டன. இதன்தொடா்ச்சியாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் உதவிக் கண்காணிப்பாளா் துரை முருகன், அஞ்சல் அதிகாரி சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

SCROLL FOR NEXT