சென்னை

மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து

DIN

பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ், ரூ.2.47 கோடி மதிப்பில் 9,100 ச. அடி பரப்பளவில் பங்காரு தெருவில் சென்னை நடுநிலைப் பள்ளிக் கட்டடம், டாக்டா் பெசன்ட் சாலையில் மாநில மேலாண்மை பேரிடா் நிதியின் கீழ் ரூ.1.67 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த திறன் மற்றும் விளையாட்டு மையத்தின் கட்டடப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, லாயிட்ஸ் காலனியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.7.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நாய் இனக் கட்டுப்பாட்டு மையக் கட்டடப் பணியையும் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பணிகளை தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றுமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT