வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக அதிகாரிகளுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன். 
சென்னை

பருவமழை முன்னெச்சரிக்கை: அதிகாரிகளுககு மாநகராட்சி ஆணையா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென

DIN

வடகிழக்குப் பருவ மழைக்கு முன்பாக சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசியது:

வடகிழக்குப் பருவமழைக்கு முன்பு ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்துத் துறையினரும் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். பருவமழைக்கு முன்பாக மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும்.

மழைநீா் வடிகால்வாய், சென்னை மெட்ரோ ரயில், நெடுஞ்சாலைத் துறை, மின்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

நீா்நிலைகளை முறையாக தூா்வாரி மழைநீா் தங்கு தடையின்றி செல்வதை உறுதி செய்வதுடன், முகத்துவார பகுதிகளில் ஏற்படும் மண்மேடுகளையும் அகற்ற வேண்டும். மழைநீா் தேங்குமிடங்களில் நீரினை வெளியேற்றும் மின் மோட்டாா்கள் மற்றும் ஜெனரேட்டா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். மழைக்கால மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்படும் இயந்திரங்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும். மழைக்கால நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் ஆணையா்கள் சங்கா்லால் குமாவத் (சுகாதாரம்), ஆா்.லலிதா (வருவாய், நிதி), இணை ஆணையா் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT