பெரம்பூர் நகைக்கடையில் எடை அதிகமுள்ள நகைகளை தேர்வு செய்து திருடிய திருடர்கள் 
சென்னை

பெரம்பூர் நகைக்கடையில் எடை அதிகமுள்ள நகைகளை தேர்வு செய்து திருடிய திருடர்கள்

நகைக் கடையில் ஷெட்டரை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து கடைக்குள் நுழைந்த திருடர்கள், தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

DIN

சென்னை கொளத்தூர் தொகுதியான பெரவள்ளூர், திருவிக நகர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் உள்ள நகைக் கடையில் ஷெட்டரை வெல்டிங் இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து கடைக்குள் நுழைந்த திருடர்கள், தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனர்.

நகைக்கடையில் நடந்த திருட்டு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் அடுத்து பெரவள்ளூர் நான்கு வழிச் சாலையில் உள்ள தனியார் நகைக் கடையில் ஷெட்டரை வெல்டிங் வைத்து சுரங்கப்பாதை போல வழி அமைத்து உள்ளே சென்ற திருடர்கள், நகைக்கடையில், எடை அதிகம் உள்ள பெரிய நகைகளை மட்டும் திருடிச் சென்றுள்ளதால் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் (ஜெயச்சந்திரன் ) நகைக் கடை உரிமையாளரிடமிருந்து விசாரணை தீவிரபடுத்தி வருகின்றனர். 

மேலும் தற்போது முதற்கட்ட தகவலாக சுமார் 9 கிலோ எடையுள்ள தங்கம் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், மேலும் வைர நகைகளை திருடி சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு, இந்த திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார் ? என்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT