சென்னை

சின்மயா மிஷன் பதிப்பகம்

சின்மயா மிஷன் அமைப்பால் 50 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.

DIN

சின்மயா மிஷன் அமைப்பால் 50 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் நாட்டின் பண்பாடு, கலாசாரத்தை அறியவும், அறநெறி வழுவாது வாழவும் பயன்படக் கூடிய புத்தகங்களை பதிப்பகம் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
 இதுவரையில் பதிப்பகம் சார்பில் ஆன்மிக, கலாசார, பண்பாட்டு கருத்துகளை மையமாக வைத்து நூற்றுக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளிலும் இப்பதிப்பக புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 பதிப்பகத்தில் முத்திரை பதித்த புத்தகம் எனில் சுவாமி சின்மயானந்தரால் எழுதப்பட்ட பகவத் கீதை உரையாகும். தமிழ், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அந்த புத்தகம் ஏராளமானோரால் விரும்பி வாங்கிச்செல்லப்பட்டுவருகிறது.
 அதேபோல உபநிஷத்துகள் குறித்த சுவாமி சின்மயானந்தரின் உரை நூல்களும் வாசகர்களால் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லப்படுகின்றன.
 அவரது ஸ்ரீராமகீதா புத்தகமும், சுவாமி தேஜோமயானந்தரின் விபீஷண கீதா உள்ளிட்ட நூல்களும் அதிக அளவில் விற்கப்பட்டுவருகின்றன.
 பக்தி, வேதாந்தம், கிருஷ்ணர் குறித்த "யாதுமாகி நின்ற கண்ணன்', "விஷமக்கார கண்ணன்' உள்ளிட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களும் பதிப்பகத்தில் வெளியிடப்பட்டு வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. உடல்நலன் உள்ளத்தின் நலன் காக்கும் வகையில் "முதுமை ஓர் இசை' புத்தகமும், இளைஞர்களுக்கான தன்னம்பிக்கை புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளன.
 சுவாமி சின்மயானந்தரின் புத்தகங்கள் அனைத்தும் தொடர்ந்து பதிப்பிக்கப்படுவதுடன், சிறந்த ஆன்மிக ஞானிகளது புத்தகங்கள் பலவும் பதிப்பித்து வெளியிடப்பட்டு வருகின்றன என்கிறார்கள் பதிப்பக பொறுப்பாளர்கள்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT