ஜி.ராமகிருஷ்ணன்,
மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு
உறுப்பினர்.
இளைய தலைமுறைக் குழந்தைகள் பள்ளிக் கல்வி, உயர்கல்வி வகுப்புகளில் பயிலும் பாடங்கள் மட்டுமே அவர்களது அறிவுக்கு ஏற்றதல்ல. தற்போதைய கல்வி முறையில் வாழ்க்கையுடன் கல்வியை இணைக்கும் முறையில்லாத நிலையே உள்ளது. அறிவியல் பாடம் என்பது குழந்தைகளுக்கு மிகவும் முக்கியமானதாகும். குழந்தைகளுக்கான நூலாக நடராஜன் எழுதிய "ஆயிஷா' கேள்வி ஞானத்தை முன்னிலைப்படுத்தி வெளியாகியுள்ளது. அந்த நூல் தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசம் கடந்து வெளிநாடுகளிலும் பிரபலமாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதனடிப்படையில் பார்த்தால், கேள்வி ஞானமுள்ள குழந்தைகளை விரும்பாத ஆசிரியர் சமூகம் உள்ளதையே காண முடிகிறது. ஆகவே, குழந்தைகள் கேள்வி கேட்கும் கல்வி முறையே நமக்கான தற்போதைய தேவையாக உள்ளது. கேள்வி கேட்கும் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் நடந்துகொள்வதும் அவசியம்.
பெற்றோர் தமது குழந்தைகளை புத்தகக் காட்சிக்கு அழைத்து வந்து அவர்களுக்கான புத்தகங்களை வாங்கித் தருவதை முக்கியமாகக் கொள்ள வேண்டும். அதன்மூலம் குழந்தைகளது படிப்பாற்றலை ஊக்குவிக்க வேண்டும். ஒன்றைப் படித்த பிறகே நாம் எதைப் படிக்கவில்லை என்பது தெரியவரும். அதனால்தான் குழந்தைப் பருவத்தில் இருந்தே படிப்பாற்றலை வளர்க்க வேண்டியது அவசியமாகிறது.
சென்னை போன்ற இடங்களில் நிரந்தரப் புத்தகக் காட்சியை அரசு ஏற்படுத்தி, குழந்தைப் பருவத்திலிருந்தே அனைவரும் வாசிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதன் மூலம் எதிர்காலத்தில் அறிவார்ந்த தலைமுறையை உருவாக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.