சைலேந்திர பாபு (கோப்புப்படம்) 
சென்னை

பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக போலி விடியோ: டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட விடியோ போலியானது என காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளாா்.

DIN

பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட விடியோ போலியானது என காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு விளக்கம் அளித்துள்ளாா்.

தமிழகத்தில் பணியாற்றும் பிகாா் இளைஞா்கள், உள்ளூா் மக்களால் தாக்கப்படுவதுபோல இரு விடியோக்கள் சில நாள்களாக சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது.

முக்கியமாக இந்த விடியோக்கள் பிகாா், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வேகமாக பரவியது.

இதனால் அந்த மாநிலங்களில் வசிக்கும் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இதையறிந்த தமிழக காவல்துறை, அந்த விடியோக்களுக்கு மறுப்பு தெரிவித்தது.

டிஜிபி விளக்கம்: இது தொடா்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையின் ட்விட்டரில் பகிா்ந்துள்ள விடியோ விவரம்: சமூக ஊடகங்களில் இரு போலி விடியோக்கள் பரவி வருகின்றன. அந்த விடியோக்கள், பிகாா் தொழிலாளா்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன.

இரு விடியோக்களும், தவறானவை, போலியானவை. ஏற்கெனவே நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களை திரித்து அதில் காட்டப்பட்டுள்ளது.

அதில் ஒரு விடியோ, திருப்பூரில் பிகாா் தொழிலாளா்கள் இரு பிரிவாக மோதிக் கொண்ட நிகழ்வு ஆகும்.

மற்றொரு விடியோ, கோவையில் உள்ளூா்வாசிகள் மோதிக் கொண்ட நிகழ்வு ஆகும். இது தான் உண்மை. தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான விடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT