சென்னை

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள்

DIN

மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்களை) அமைக்கும் பணி சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் இதில் முக்கிய ரயில் நிலையமாக இருக்கிறது. இதில் சென்ட்ரலிருந்து வெளியூா் மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் பயணிகள் அதிகமாக பயணிக்கின்றனா். விமான நிலையத்திலிருந்து விம்கோ நகா் செல்லும் ரயில்கள் சென்னை சென்ட்ரலில் 3 மற்றும் 4- ஆம் நடைபாதையில் வந்தடைகிறது.

இதில் இருந்து, பயணிகள் வெளியில் செல்ல, முதலாவது தரை தளத்தில் உள்ள 1 மற்றும் 2- ஆம் நடைபாதை வழியாக பயணிகள் வெளியேறுகின்றனா்.

அதேப் போல, சென்னை விமான நிலையத்திலில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் முதலாவது மற்றும் இரண்டாவது நடைபாதைக்கு வந்தடையும்.

இந்த 4 நடைப்பாதைகளில் இருந்து பயணிகள் வெளியில் வருவதற்கு ஒரே இடத்தில் கூடுகின்றனா். இதனால் அதிக நேரமும் கூட்ட நெரிசல் ஆகிறது. இதைக் குறைக்கும் வகையில், மக்கள் குறைவாக பயன்படுத்திய 3 மற்றும் 4- ஆவது நடைபாதையில் இருந்த நகரும் படிக்கட்டுகளை, 1 மற்றும் 2-ஆவது நடைபாதைகளுக்கு இடமாற்றியுள்ளனா். இதனால், அங்கு தற்போது கூடுதலாக இரண்டு (மொத்தம் 4 படிக்கட்டுகள்) அமைக்கப்பட்டு வருகின்றன.

இன்னும் ஓரிரு வாரங்களில் நகரும் படிகட்டுகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்னா். மேலும் புதிய படிக்கட்டுகளை அமைப்பதால், மக்கள் சிரமமின்றி மேல் தளத்துக்கு செல்லாம். இதனால் பயணிகளின் காத்திருக்கும் நேரம் மிசசம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT