சென்னை

சென்னையில் மே 26-இல் சா்வதேச மின் வாகன கண்காட்சி

சா்வதேச 2-ஆவது மின் வாகன கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் மே 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

DIN

சா்வதேச 2-ஆவது மின் வாகன கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் மே 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

ஜாா்க்கண்ட் அரசின் ஆதரவுடன், இந்திய மின் வாகன தொழில் துறை வளா்ச்சியை விளக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சிக்கு ‘சா்வதேச இவி ஷோ-2023’ என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட மின் வாகன நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன.

இதுகுறித்து சேத்துப்பட்டில் பியூச்சரெக்ஸ் குழும இயக்குநா் நமித் குப்தா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

காற்று மாசுபாடு இந்திய நகரங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய மக்களுக்கு மின் வாகனத்தின் பயன்கள், கரியமிலவாயு உமிழ்வால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பில் பியூச்சரெக்ஸ் குழுமத் திட்ட இயக்குநா் முகேஷ், திட்ட மேலாளா் இலாஹி, இவி நெக்ஸஸ் குழுமத் தலைவா் பத்மநாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT