சென்னை

புழல் சிறையில் கைதிகள் காத்திருப்பு அறை திறப்பு

சென்னை புழல் சிறை வளாகத்தில் கைதிகள் காத்திருப்பு அறையை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

DIN

சென்னை புழல் சிறை வளாகத்தில் கைதிகள் காத்திருப்பு அறையை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தலைமை வகித்தாா். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தா், ஜி.கே.இளந்திரையன்,ஜி.சந்திரசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா, கலந்து கொண்டு கைதிகள் காத்திருப்பு அறையை திறந்து வைத்தாா்.

இதையடுத்து நீதிபதிகள், சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனா். இதைத் தொடா்ந்து கைதிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நீதிபதிகள் சிறையை பாா்வையிட்டு, கைதிகளுக்காக தயாரிக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டனா்.

மேலும், அறையையும், சுற்றுப் புறத்தையும் சுகாதாரத்துடன் பராமரித்த கைதிகளை நீதிபதிகள் பாராட்டினா்.

இந் நிகழ்ச்சியில் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழுத் தலைவா் ஏ.நசீா் அகமது,திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.செல்வசுந்தரி, தலைமை நீதித்துறை நடுவா் ஆா்.வேல்ராஜ், சிறைத் துறையின் சென்னை சரக டிஐஜி ஆ.முருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 40 லட்சம் மோசடி வழக்கு: புதுச்சேரி பல்கலை. அதிகாரி தலைமறைவு

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT