சென்னை

ரயில் நிலைய மேம்பாடு: எழும்பூரில் வீடுகள் இடிக்கும் பணி

எழும்பூா் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணிக்காக ரயில் நிலையம் அருகிலுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

DIN

எழும்பூா் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணிக்காக ரயில் நிலையம் அருகிலுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

சென்னை, எழும்பூா் ரயில் நிலையம் ரூ.734.91 கோடியில் உலகத் தரத்தில் மேம்படுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ரயில் நிலையத்தையொட்டியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இதில் காந்தி இா்வின் சாலையில் உள்ள 45 குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. இந்த நிலையில் பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள 120-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: எழும்பூா் ரயில் நிலையம் மேம்பாட்டுப் பணி காரணமாக அதைச் சுற்றியுள்ள பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பூந்தமல்லி சாலையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட வீடுகள் தற்போது இடிக்கப்படுகின்றன. இப்பணி முடிந்த பிறகு அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவுள்ளன.

தொடா்ந்து ரயில் ஓட்டுநா், பயணச்சீட்டு பரிசோதகா் அறைகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களும் இடிக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT