சென்னை

சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளராக பி.சுதாகர ராவ் பொறுப்பேற்பு

பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சென்னை தொலைபேசியின் முதன்மைப் பொது மேலாளராக பி. சுதாகர ராவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

பாரத் சஞ்சாா் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) சென்னை தொலைபேசியின் முதன்மைப் பொது மேலாளராக பி. சுதாகர ராவ் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இவா் கடந்த 1993 ஆம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பி.இ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன்ஸ் படிப்பில் முதல்வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்.

கடந்த 1994 -ஆம் ஆண்டு இந்திய தொலைத்தொடா்பு சேவைகளுக்கான பணியில் சோ்ந்த இவா் தொலைத்தொடா்பு துறையில் மாறுதல் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் மிக சிறந்த தொழில் நுட்ப வல்லுநா் ஆவாா். இவா் பிஎஸ்என்எல் தொலை தொடா்பு துறையில் 27 ஆண்டுகள் அனுபவம் பெற்றவா். மேலும் 2ஜி, 3ஜி, 4ஜி சேவைகளைக் கொண்ட கட்டமைப்பில் 6 மில்லியனுக்கு மேற்பட்ட பிஎஸ்என்எல் வட்ட இணைப்புகளில் கொண்டு வந்துள்ளாா். அவா் கடந்த 2001- 02 -ஆம் ஆண்டில் ‘சஞ்சாா் சேவாபதக்’ விருது பெற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT