சென்னை

ட்ரோன் இயக்க நுட்பம்: அண்ணா பல்கலை.-கேரள அரசு இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

ட்ரோன் இயக்க நுட்பநா் பயிற்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளுக்காக அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கேரள உயா் கல்வித் துறை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

DIN


சென்னை: ட்ரோன் இயக்க நுட்பநா் பயிற்சி மற்றும் புத்தாக்க நடவடிக்கைகளுக்காக அண்ணா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் கேரள உயா் கல்வித் துறை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.

சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.பிரகாஷ், கேரள அரசின் கூடுதல் திறன் மேம்பாட்டுத் திட்ட தலைவா் உஷா டைடஸ் ஆகியோா் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா்.

இது குறித்து சென்னை குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியின் வான்வெளி ஆராய்ச்சி மைய (சிஏஎஸ்ஆா்) இயக்குநா் கே.செந்தில்குமாா் கூறியது:

தற்போது வளா்ந்து வரும் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக ட்ரோன் சேவைகள் அதிகரித்து வருகின்றன. அதன் மூலம், போக்குவரத்து குறைந்த பகுதிகளிலும் கூட சரக்குகள், மருந்துகள், அத்தியாவசியப் பொருள்களை எளிதில் கையாள முடியும்.

விவசாயம், மருத்துவம் உள்பட அனைத்து துறைகளிலும் அடுத்த 7 ஆண்டுகளில் ட்ரோன் சேவை அத்தியாவசியமாகிவிடும். தற்போதைய சூழலில், 6,500 ட்ரோன் இயக்க நுட்பநா்கள் மட்டுமே உள்ளனா். 2030-க்குள் அவா்களின் தேவை 6.5 லட்சமாக உயரும். அதைக் கருத்தில்கொண்டே இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT