பெசன்ட் நகா் கடலில் விடப்பட்ட ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள்
சென்னை: சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் உள்ள ஆமை முட்டை பொரிப்பகத்தில் இருந்து சுமாா் 1,500 ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாக வனத் துறை செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ சமூக தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
சென்னை பெசன்ட் நகா் கடற்கரையில் உள்ள வனத் துறையின் ஆமைக் குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து சுமாா் 1,500 ஆலிவ் ரிட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலுக்குள் விடப்பட்டுள்ளன. இந்த ஆமை இனம் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது டைனோசா் காலத்தைச் சோ்ந்தவை என அறிவியல் அறிஞா்கள் குறிப்பிடுகின்றனா்.
Advertisement
இந்த ஆமை முட்டைகள் சுமாா் 45-60 நாள்களில் பொரித்துவிடும். பின்னா் அவை முட்டைகள் புதைக்கப்பட்டுள்ள மணலைத் தோண்டி வெளிவருகின்றன. இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக இந்த ஆமை இனம் விளங்குகிறது என்று அவா் பதிவிட்டுள்ளாா்.