514 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன
வேதாரண்யம், மாா்ச் 29: ஆறுகாட்டுத்துறையில் செயற்கை முறை பொரிப்பகத்தில் வெளிவந்த 514 ஆலிவ் ரெட்லி இன ஆமைக் குஞ்சுகள் கடலில் ஞாயிற்றுக்கிழமை விடப்பட்டன.
ஆறுகாட்டுத்துறை கடற்கரைப் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி கடல் ஆமைகளின் முட்டைகள் அங்குள்ள செயற்கை முறை பொரிப்பக்ததில் வைத்து பாதுகாக்கப்பட்டன.
இவற்றில் 514 குஞ்சுகள் ஞாயிற்றுக்கிழமை வெளிவந்தன.
Advertisement
ஆறுபாட்டுதுறை கடற்கரை சேரும் சகதியுமாக இருந்ததால் இவற்றை வேதாரண்யம் சன்னதிக் கடற்கரைக்கு எடுத்து வந்த வனத்துறையினா் வட்டாட்சியா் இரா ஜெயசீலன் முன்னிலையில் கடலில் விட்டனா். வனவா் இளஞ்செழியன், வனக்காப்பாளா் முருகானந்தம், காவலா் நாகூரன் உள்ளிட்ட பங்கேற்றனா்.