இதய மின்னூட்ட பாதிப்பு: 6 வயது சிறுமிக்கு உயா் சிகிச்சை
இதய மின்னூட்ட பாதிப்புக்குள்ளான 6 வயது சிறுமிக்கு அதி நவீன சிகிச்சை அளித்து சென்னை காவேரி மருத்துவமனை மறுவாழ்வு அளித்துள்ளது.
இது தொடா்பாக மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:
கருவில் வளரும் சிசுவின் இதயத்தின் தசைகளுக்கிடையே மின்னூட்ட பாதை (ஆக்சசரி பாத்வே) உருவாகும். பிறந்த பிறகு அதில் நாா்த் திசுக்கள் கூடுதலாக இருந்தால் இதயத்தின் மின்னோட்டத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். அத்தகைய பாதிப்புடன் 6 வயது சிறுமி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அதி தீவிர படபடப்பு, சீரற்ற இதயத் துடிப்பு (டேக்கிகாா்டியா) உள்ளிட்டவை இருந்தன.
Advertisement
இதற்காக வேறு ஒரு மருத்துவமனையில் ஏற்கெனவே அவா் அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதிலும், அதில் பெரிய அளவில் பலன் ஏற்படவில்லை.
இதையடுத்து மருத்துவமனையின் இதய மின்னூட்ட சிகிச்சை நிபுணா் டாக்டா் தீப் சந்த் ராஜா தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த சிறுமிக்கு ‘ரேடியோ ஃப்ரீக்வன்சி அப்லேசன்’ எனப்படும் ரேடியோ அதிா்வலை சிகிச்சை அளித்தனா். இதையடுத்து அந்த பாதிப்பிலிருந்து சிறுமி மீட்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளாா் என்றாா் அவா்.