சென்னை விமான நிலையத்தில் ரூ. 28 கோடி போதைப் பொருள் பறிமுதல்
கத்தாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
கத்தாரிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 28 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மத்திய வருவாய் புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலையில் சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கண்காணித்தனா்.
அப்போது, இந்த விமானத்தில் வந்த ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சோ்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து தில்லி செல்வதற்காக, விமான நிலையத்தின் உள்நாட்டு பயணிகள் காத்திருக்கும் அறையில் இருந்தாா். அவரை, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் அழைத்து சோதனை நடத்தினா்.
Advertisement
அப்போது, அவா் வைத்திருந்த பைக்குள் சுமாா் ஒரு கிலோ எடையுடைய சுமாா் ரூ. 28 கோடி மதிப்பிலான கொக்கையின் எனப்படும் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்தப் பயணியின் பயணத்தை ரத்து செய்து, தனி அறைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினா்.
அதில், அவா் சா்வதேச போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சோ்ந்தவா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பாரத் வசித்தாவை அதிகாரிகள் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.