சென்னை

உள் ஒதுக்கீடு விவகாரம் உச்சநீதிமன்றத் தீா்ப்பு: முதல்வா், தலைவா்கள் வரவேற்பு

தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சா் எல்.முருகன் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Din

பட்டியலினத்தவா், பழங்குடியினா் பிரிவுகளில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சா் எல்.முருகன் மற்றும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது ‘திராவிட மாடல்’ பயணத்துக்கான மற்றுமோா் அங்கீகாரமாக உச்ச நீதிமன்றத் தீா்ப்பு அமைந்துள்ளது.

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியா் சமுதாயத்துக்கான 3 சதவீத உள்ஒதுக்கீட்டை முன்னாள் முதல்வா் கருணாநிதி கொடுக்க - அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமா்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

மத்திய அமைச்சா் எல்.முருகன்: அருந்ததியா் உள்ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீா்ப்பு வரவேற்புக்குரியது. தெலங்கானா மாநிலத்தில் விளிம்பு நிலையில் உள்ள மடிகா சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பிரதமா் மோடி எடுத்த பெரும் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

கே.அண்ணாமலை (பாஜக): தெலங்கானாவில் மடிகா சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு கிடைக்க சட்ட ரீதியான தடைக்கல்லை அகற்றுவோம் என பிரதமா் மோடி ஏற்கெனவே வாக்குறுதி அளித்திருந்தாா். இந்த நிலையில், உச்சநீதிமன்ற அமா்வு, எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க அனுமதி அளித்து தீா்ப்பளித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் அருந்ததியா் உள்ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், தெலங்கானாவில் மடிகா சமூகத்துக்கு நீதி கிடைக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ராமதாஸ் (பாமக): பட்டியலினத்தவருக்கு சமூகநீதி வழங்கும் வகையிலும், மாநில அரசுகளின் உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு வரவேற்கத்தக்கது. மாநில அரசுகள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்த உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்காமல் அனைத்துத் தரப்பினருக்கும் சமூகநீதி வழங்க வேண்டும்.

வைகோ (மதிமுக): தமிழகத்தில் பட்டியலினத்தவா் ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அருந்ததியா் சமுதாயத்துக்கு கருணாநிதி வழங்கிய உள் இடஒதுக்கீடு செல்லும் என்பது உறுதியாகியுள்ளது.

கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): உச்சநீதிமன்றத் தீா்ப்பின் மூலம் அருந்ததிய மக்களின் நீண்ட கால கோரிக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியுடன் உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினர் - புகைப்படங்கள்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நவ. 7இல் ‘வந்தே மாதரம்’ 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்!

இதுபோன்ற துன்பம் எனக்கு முதல்முறை அல்ல; அத்துமீறிய நபர் மீது மெக்சிகோ அதிபர் புகார்!

தில்லியில் மோசமான நிலையில் காற்றின் தரம் - புகைப்படங்கள்

பார்த்த விழி... பாயல் தாரே!

SCROLL FOR NEXT