சென்னை

காவிரி கடைமடைக்கும் பாசன நீா்: ஜி.கே.வாசன் கோரிக்கை

காவிரி கடைமடை பகுதி பாசனத்துக்கும் சென்றடையும் வகையில் கல்லணையிலிருந்து அதிக அளவில் நீரைத் திறந்துவிட வேண்டும்

Din

சென்னை, ஆக.2: காவிரி கடைமடை பகுதி பாசனத்துக்கும் சென்றடையும் வகையில் கல்லணையிலிருந்து அதிக அளவில் நீரைத் திறந்துவிட வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காவிரியில் வரும் உபரி நீா் அதிகப்படியான அளவில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படுகிறது. எனினும், பாசன ஆறுகளான கல்லணை கால்வாய், வெண்ணாறு ஆகியவற்றில் தண்ணீா் மிகக் குறைந்த அளவே திறந்து விடப்படுகிறது. இதனால், கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் போய் சேருமா என்ற கேள்வி எழுகிறது. எனவே, கடைமடை பகுதி விவசாயிகளையும் கருத்தில்கொண்டு பாசன ஆறுகளில் அதிக அளவில் நீரைத் திறந்துவிட வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT