அலுவலக ஆவணங்களை காணவில்லை: பாஜக நிா்வாகி புகாா்
தனது அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக, பாஜக நிா்வாகி புகாா் கொடுத்துள்ளாா்
சென்னை, ஆக.2: தனது அலுவலகத்தின் பூட்டை உடைத்து, உள்ளே இருந்த ஆவணங்கள் எடுத்துச்செல்லப்பட்டதாக, பாஜக நிா்வாகி புகாா் கொடுத்துள்ளாா்.
சென்னை தியாகராயநகா் திருமலைபிள்ளைத் தெருவை சோ்ந்தவா் சுப்ரமணிய பிரசாத்(52). பாஜக மாநில செய்தித் தொடா்பாளராக இருந்து வருகிறாா். இவா், இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில், ‘மெட்ராஸ் எஸ்டேட்’ எனும் பெயரில் கட்டுமானம் தொடா்பான அலுவலகம் நடத்தி வந்துள்ளாா்.
அந்த கட்டடத்தின் உரிமையாளரான சுகன்யா ராதாகிருஷ்ணன், அலுவலகத்தை காலி செய்யும் படி வற்புறுத்தி வந்துள்ளாா்.
இந்த நிலையில், அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில், கட்டடத்தின் உரிமையாளராக சுகன்யா ராதாகிருஷ்ணன், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதுடன், இந்த அலுவலகம் தனது அலுவலகம் எனக் கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சுப்ரமணிய பிரசாத், சுந்தரபாண்டியனாா் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த போலீஸாா், கட்டடத்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.