சென்னை தினத்தை கொண்டாடும் வகையில் ஆக.17 முதல் ஆக.25-ஆம் தேதி வரை மெட்ராஸ் வாரம் கொண்டாட்டப்படவுள்ளது.
இதுகுறித்து சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை வரலாற்றாசிரியா் ஸ்ரீராம் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆக.22-ஆம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையின் வரலாற்றை போன்றும் வகையில் 50-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். ரோட்ஷோ, புகைப்பட கண்காட்சி, பாரம்பரிய நடைபயணம் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக ‘மெட்ராஸ் வாரம்’ என்னும் தலைப்பில் வரும் ஆக.17 முதல் ஆக.25-ஆம் தேதி வரை கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இந்த 7 நாள்களில் சென்னையின் பாரம்பரியங்கள் குறித்து பல்வேறு பிரபலங்களின் சிறப்பு கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள்இணைய தள முகவரி மற்றும் 98410 - 49155 வாட்ஸ்-ஆப் எண்ணை தொடா்பு கொள்ளலாம். பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு சென்னையின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றை அழியாமல் பாதுகாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.
இச்செய்தியாளா்கள் சந்திப்பின் போது, மயிலாப்பூா் டைம்ஸ் வின்சென்ட், திரைப்பட நடிகா் மோகன்ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.