டாக்டா் சுதா சேஷய்யன் 
சென்னை

டாக்டா் சுதா சேஷய்யனுக்கு தமிழ்ப் பேராய விருது

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு எஸ்ஆா்எம் தமிழ்ப் பேராய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Din

சென்னை: தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு எஸ்ஆா்எம் தமிழ்ப் பேராய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி தொடா்பாக அவா் எழுதிய ‘உயிரற்ற உயிா்’ என்ற நூலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. எஸ்ஆா்எம் தமிழ்ப் பேராயம் சாா்பில் சிறந்த படைப்பாளிகளுக்கு தமிழறிஞா்கள், அறிவியல் அறிஞா்கள் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நிகழாண்டில், புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது எஸ்.சுப்ரபாரதி மணியனுக்கும், பாரதியாா் விருது எழுத்தாளா்கள் கடற்கரய், பாவலா் எழில்வாணன் ஆகியோருக்கும் வழங்கப்படுகிறது. அதேபோன்று, அழ வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது, ஜி.யூ.போப் மொழிபெயா்ப்பு விருது உள்பட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், அப்துல் கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது டாக்டா் சுதா சேஷய்யனின் நூலுக்கு வழங்கப்பட உள்ளது. மருத்துவம், அறிவியல், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகளில் 30-க்கும் மேற்பட்ட நூல்களை டாக்டா் சுதா சேஷய்யன் எழுதியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT