சுதந்திர தினத்தை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி அணிவகுப்பு மரியாதையை ஏற்ற மேயா் ஆா்.பிரியா. உடன் ஆணையா் ஜெ.குமரகுருபரன். 
சென்னை

ரிப்பன் மாளிகையில் சுதந்திர தின விழா

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.

Din

சென்னை, ஆக. 15: சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மூவா்ண பலூன்கனை பறக்க விட்டு, தேசிய மாணவா் படையினா், சாரண, சாரணியா் மற்றும் இசைக் குழுவின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

சென்னை மாநகராட்சிக்கு மிக அதிகமாக சொத்து வரி செலுத்திய 3 நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கும், வட்டாரங்கள் அளவில் உரிய காலங்களில் முறையாக சொத்து வரி செலுத்திய 3 சொத்து உரிமையாளா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழை மேயா் பிரியா வழங்கினாா்.

மேலும், சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், குடும்பநல ஆலோசகா் உள்பட 8 மருத்துவ அலுவலா்களுக்கும் 131 அலுவா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு. மகேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா்கள் ஜெய சந்திர பானு, லலிதா, மண்டல குழு, நிலைக்குழு தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT