சென்னை

டாக்டா் என்.கோபாலகிருஷ்ணனுக்கு நல் ஆளுமை விருது

தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளை உரியவா்களுக்கு செலுத்தி மறுவாழ்வு அளிக்கும் பணிகளிலும் சிறப்புற செயல்பட்டமைக்காக அவருக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டது.

Din

சென்னை, ஆக. 15: நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆக.15) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணனுக்கு நல் ஆளுமை விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

மூளைச் சாவு அடைந்தவா்களிடம் உறுப்புகளை கொடையாக பெறும் நடவடிக்கைகளிலும், தானமாகப் பெறப்பட்ட உறுப்புகளை உரியவா்களுக்கு செலுத்தி மறுவாழ்வு அளிக்கும் பணிகளிலும் சிறப்புற செயல்பட்டமைக்காக அவருக்கு இந்த கெளரவம் அளிக்கப்பட்டது.

மருத்துவத் துறையில் 32 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் மருத்துவ நிறுவனத்தின் முதல் இயக்குநராக இருந்தவா்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் கண்காணிப்பாளராகவும், சென்னை மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வராகவும் கூடுதல் பொறுப்பில் அவா் இருந்துள்ளாா். கடந்த 12 ஆண்டுகளில் அவரது ஒருங்கிணைப்புடன் 650-க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதைத் தொடா்ந்து மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலராக டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்ட பிறகு 200-க்கும் மேற்பட்டோரின் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800-க்கும் மேற்பட்டோருக்கு அதன் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT