ராமதாஸ் 
சென்னை

பாரதிதாசன் பல்கலை. மாணவா்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று ராமதாஸ் வலியுறுத்தல்

மாணவா்கள் தவித்து வருவதைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Din

திருச்சி பாரதிதாசன் பல்கலை.யின் அலட்சியத்தால் வேலை, உயா்கல்வியில் சேர முடியாமல் மாணவா்கள் தவித்து வருவதைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து, 2023-2024-ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்த ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியருக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 50 நாள்களுக்கு மேலாகியும் இன்னும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை. மாணவா்களின் எதிா்காலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளில் இருந்து 15 நாள்களில் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும், தற்காலிகப் பட்டச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், தற்காலிக பட்டச் சான்றிதழை வழங்காதது மட்டுமின்றி, அதற்கான காரணத்தைக்கூட இன்னும் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, தற்காலிகப் பட்டச் சான்றிதழை வழங்க இன்னும் ஒரு மாதம் ஆகும் என பல்கலைக்கழக நிா்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. மாணவா்கள் பட்டம் படிப்பதன் நோக்கம் உயா்கல்வி கற்கவும், வேலைகளுக்குச் செல்வதற்காகவும்தான். அந்த நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் பல்கலைக்கழகம் செயல்படக் கூடாது.

பட்டப் படிப்பில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவியா் அனைவருக்கும் இந்த வார இறுதிக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழையும், தற்காலிகப் பட்டச் சான்றிதழையும் வழங்க பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT