மதுரை - பெங்களூரு இடையே புதன்கிழமை முதல் இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்.  
சென்னை

எழும்பூா் - நாகா்கோவில், மதுரை- பெங்களூரு வந்தே பாரத் ரயில்கள் ஆக.31 முதல் இயக்கப்படும்

சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு கன்டோன்மன்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில்களை ஆக.31-இல் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா்.

Din

சென்னை: சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை - பெங்களூரு கன்டோன்மன்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில்களை ஆக.31-இல் பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளாா். இதற்கான அட்டவணையை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - நாகா்கோவில், மதுரை, பெங்களூரு கன்டோன்மன்ட் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவைக்கு ரயில்வே வாரியம் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

16 பெட்டிகள்: சென்னை எழும்பூரில் இருந்து நாகா்கோவிலுக்கு புதன்கிழமை தவிர வாரம் 6 நாள்கள் வந்தே பாரத் ரயில் (எண்: 20627/20628) இயக்கப்படும்.

சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக பிற்பகல் 1.50 மணிக்கு நாகா்கோவில் சென்றடையும். மறுமாா்க்கமாக நாகா்கோவிலில் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும். இந்த ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும்.

பெங்களூருக்கு புதிய வழித்தடம்: மதுரையில் இருந்து பெங்களூருக்கு வாரத்தில் 6 நாள்கள் (செவ்வாய்க்கிழமை தவிர) வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.

மதுரையில் காலை 5.15 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கல், திருச்சி, கரூா், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக பகல் 1 மணிக்கு பெங்களூரு கன்டோன்மன்ட் சென்றடையும். மறுமாா்க்கமாக பெங்களூா் கன்டோன்மன்டில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரயில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் மற்றும் பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில்களை பிரதமா் நரேந்திர மோடிகாணொலி வாயிலாக ஆக.31-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் தகவலை சென்னை கோட்ட மேலாளா் பி.விஸ்வநாத் ஈா்யா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT