கிளாம்பாக்கம் கலைஞா் நுற்றாண்டு பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் நடை மேம்பாலம் அமைப்பதற்கான டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்துக்குள்பட்ட பகுதிகளில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் தென், வட மாவட்ட பேருந்துகள் அனைத்தையும் இயக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் தொடங்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை முதல் இப்பேருந்து நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கியுள்ளது.
மேலும், பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தின் அருகிலேயே ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்துக்கும், ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்துக்கும் எளிதாக செல்ல நடைமேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ டெண்டா் அறிவிப்பும் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. 400 மீட்டா் நீளத்தில், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி வசதியுடன் கட்டப்படவுள்ள இந்த நடைமேம்பாலத்தின் கட்டுமானப்பணிகளை சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் மேற்கொள்ளவுள்ளது. பிப்.14-ஆம் தேதி வரை இணைய வழியில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.