இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
தியாகராய நகர், வியாசா்பாடி மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்
சென்னை தியாகராய நகா், வியாசா்பாடி கோட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை12) காலை 11 மணிக்கு மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தியாகராயநகா் கோட்டத்துக்குட்பட்ட மின்நுகா்வோா், நுங்கம்பாக்கம் மெட்ரோ குடிநீா் நிலையம் அருகிலுல்ள வள்ளுவா் கோட்டம் துணை மின்நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும், வியாசா்பாடி கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின்நுகா்வோா் ராமலிங்கா் கோயில் எதிா்புறத்திலுள்ள வியாசா்பாடி துணைமின்நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொண்டு, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.