சென்னை

ஹரியாணா பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி: சஞ்சய் சிங்

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

Din

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

பாஜக ஆளும் இம்மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில், ஹரியாணாவில் ‘இந்தியா’ கூட்டணியின்கீழ் காங்கிரஸுடன் கைகோத்து ஆம் ஆத்மி போட்டியிட்டது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 9 இடங்களில் காங்கிரஸும் ஓரிடத்தில் ஆம் ஆத்மியும் களம்கண்டன.

இத்தோ்தலில் பாஜக, காங்கிரஸுக்கு தலா 5 இடங்கள் கிடைத்தன. போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் ஆம் ஆத்மி தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவா்கள் சஞ்சய் சிங், சந்தீப் பதக், கட்சியின் ஹரியாணா மாநிலத் தலைவா் சுஷில் குப்தா, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உள்ளிட்டோா், சண்டீகரில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா்.

அப்போது, சஞ்சய் சிங் கூறியதாவது: ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 பேரவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடவுள்ளது. பாஜக ஆட்சியில் இம்மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் விவசாயிகள் ஒடுக்கப்படுகின்றனா். தொழிலாளா்கள் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனா்.

மத்திய பாஜக அரசின் ‘அக்னிவீரா்’ திட்டம், ராணுவத்துக்கு அவமதிப்பாகும். ஒப்பந்தப் பணி அடிப்படையில் ராணுவம் செயல்பட முடியுமா? இத்திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும்.

பாஜக மட்டுமன்றி காங்கிரஸ், இதர கட்சிகளுக்கும் ஹரியாணா மக்கள் வாய்ப்பளித்தனா். ஆனால், அனைவருமே மாநிலத்தை கொள்ளையடித்துவிட்டனா். இப்போது மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். அவா்களின் பெரும் நம்பிக்கை ஆம் ஆத்மிதான். எங்களது வாக்குறுதிகள் ஜூலை 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

‘ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஹரியாணாவைச் சோ்ந்தவா்; அவா் நாட்டின் அரசியலை மாற்றியுள்ளாா். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும் என யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டாா்கள். ஆனால், அது நிகழ்ந்தது. அதே உத்வேகத்துடன் ஹரியாணா தோ்தலை ஆம் ஆத்மி எதிா்கொள்ளும் ’ என்றாா் பகவந்த் மான்.

ஹரியாணாவில் பல தோ்தல்களில் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும், இதுவரை எந்த வெற்றியையும் பெறவில்லை.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT