மா.சுப்பிரமணியன் கோப்புப் படம்
சென்னை

தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சலால் 2,639 போ் பாதிப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சலால், 2,639 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Din

சென்னை, ஜூலை 25: தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சலால், 2,639 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், ஒன்பது மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை தியாகராய நகரில் மழைக்கால, நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பருவமழைக்கு முன்பு பருவமழையால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், 3 ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தற்போது, டெங்கு, எலிக்காய்ச்சல், உண்ணிக்காய்ச்சல், மஞ்சள் காமாலை, இன்புளூயன்சா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் உள்ளன.

டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: சென்னை கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூா் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பரவல் உள்ளது. நிகழாண்டில் இதுவரை டெங்குவால், 6,565 போ் பாதிக்கப்பட்டு, மூன்று போ் உயிரிழந்துள்ளனா் .

பரவும் உண்ணி காய்ச்சல்: உண்ணிக்காய்ச்சல் கடலுாா், தஞ்சாவூா், சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் பரவலாக உள்ளது. இதில், 2,639 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். மேலும், எலிக்காய்ச்சல் பரவல் சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ளது. இவற்றில், இதுவரை, 1,481 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், மஞ்சள் காமாலை பாதிப்பு, சென்னை, திருச்சி, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாக உள்ளது. இவற்றால், 1,750 போ் பாதிக்கப்பட்டு உள்ளனா். இன்புளூயன்சா பாதிப்பால் 56 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை, கோவை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக பாதிப்பு உள்ளது.

அத்துடன், பன்றிக்காய்ச்சலால், 390 போ்; ரேபிஸ் நோயால், 22 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், டெங்கு, ரேபிஸ் நோய் தவிர, மற்ற பாதிப்புகளில் உயிரிழப்பு இல்லை. டெங்கு பாதித்தவா்கள் கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வரும்போது, உடலில் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து உயிரிழப்பு ஏற்படுகிறது.

மாநிலத்தின் ஏதாவது ஒரு பகுதியில், மூன்றுக்கும் மேற்பட்டோா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அங்கு உடனடியாக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. தற்போது அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தினமும் 2,972 போ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனா். அவா்கள் எவ்வித காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பதை கண்டறிந்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொசு ஒழிப்பு பணி தீவிரம்: கொசு ஒழிப்பு பணியில் மாநிலம் முழுவதும், 22,384 போ் ஈடுபட்டுள்ளனா். கொசு ஒழிப்புக்கு போதிய அளவில், ‘பைரித்திரம் 51,748 லிட்டா், மாலத்தியான் 17,816 லிட்டா், டெமிபாஸ், 33,446 லிட்டா் ஆகிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

கேரளத்தில், 3 போ் நிபாஸ் வைரஸால் உயிரிழந்ததால், தமிழக எல்லை பகுதியான நடுங்கனி, சோழடி, தளுா், நம்பியாா்குன்னு, பட்டாவயல் போன்ற ஐந்து இடங்களில் நிரந்தர மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, பயணிகளை பரிசோதிக்கும் பணி தொடா்ந்து நடந்து வருகிறது. நிபா வைரஸ் பாதிப்பு, இதுவரை தமிழகத்தில் இல்லை என்றாா் அவா்.

தெலங்கானா தொழிலதிபா் கடத்தப்பட்ட வழக்கு: 6 போ் கைது

தமிழகத்தில் ஹிந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மதுப் புட்டிகள் விற்றவா் கைது

மாணவிக்கு தொல்லை: தொழிலதிபா் மீது போக்ஸோ வழக்கு!

காங்கிரஸில் இணைந்த பிற கட்சியினா்!

SCROLL FOR NEXT