ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்து தற்கொலை
சென்னை ராயப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னை ராயப்பேட்டையில் ஆட்டோ ஓட்டுநா் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாா்.
ராயப்பேட்டை, பி.எம். தா்கா 5-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தஸ்தகீா் (40). வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். தஸ்தகீரின் மனைவி ஜமீலா (33). இத் தம்பதிக்கு மகன், மகள் உள்ளனா். தஸ்தகீருக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜமீலா குடும்பத்தினா், ஐஸ்ஹவுஸில் நடைபெற்ற உறவினா் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றனா்.
ஆனால், தஸ்தகீா் திருமணத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். ஜமீலா நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த போது, தஸ்தகீா் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
ராயப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று, தஸ்தகீா் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].