முகப்பு
தற்போதைய செய்திகள்

சொத்து பிரச்னை: ஹோட்டல் அறையில் உறவினர் கழுத்தை அறுத்து கொன்ற கொடூரம்!

திருப்பூரில் சொத்து பிரச்னையில் உறவினரை ஹோட்டல் அறைக்கு வரவைத்து கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் தொடர்பாக...

Updated On : 4 பிப்ரவரி 2026, 1:41 pm IST
திருப்பூரில் சொத்து பிரச்னையில் உறவினரை ஹோட்டல் அறையில் வைத்து கழுத்தை அறுத்து கொலை
பகிர்:

திருப்பூரில் சொத்து பிரச்னையில் உறவினரை ஹோட்டல் அறைக்கு வரவைத்து கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கொலையாளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த கார்த்திகேயன். இவர் பனியன் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், சொத்து பிரச்னை சம்பந்தமாக பேசுவதற்காக திருப்பூர் பங்களா ஸ்டாப் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்கியிருப்பதாக அவரது உறவினர் கங்கை அமரன் அழைத்துள்ளார்.

இதையடுத்து கார்த்திகேயன் ஹோட்டலுக்கு புதன்கிழமை சென்றுள்ளார். அங்கு ஹோட்டல் அறையில் தங்கிருந்த உறவினர் கங்கை அமரனை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட போது கார்த்திகேயனை, அவரது உறவினர் கங்கை அமரன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகேயன் கழுத்தை அறுத்ததில் அவர் ஹோட்டல் அறையிலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

Advertisement

Advertisement

இது குறித்து ஹோட்டல் ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸார், உயிரிழந்த கார்த்திகேயனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திரூப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்த்திகேயனை கொலை செய்த அவரது உறவினர் கங்கை அமரனை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து பிரச்னையில் உறவினரை ஹோட்டல் அறைக்கு வரவைத்து கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Property dispute: A horrific incident where a relative was brutally murdered by having their throat slit in a hotel room

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.