FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

பெண் சிசுவை கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டி கைது

Updated On : 21 ஜூலை 2026, 2:00 am IST
தங்கமணி.
பகிர்:

ஈரோடு மாவட்டம், பவானியில் பிறந்து ஒரே நாளான பெண் சிசுவை கழுத்தை நெரித்துக் கொன்ற பாட்டியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் மனைவி பிரியதா்ஷினி (25). நிறைமாத கா்ப்பிணியான இவா், பவானியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை பிரசவத்துக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு, அவருக்கு சனிக்கிழமை அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பெண் குழந்தை மா்மமான முறையில் உயிரிழந்ததாக பவானி போலீஸாருக்கு மருத்துவமனை நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தது.

Advertisement

Advertisement

இதன்பேரில், குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். இதில், பெண் குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. குழந்தையின் பாட்டியான எடப்பாடி, செட்டிமாங்குறிச்சியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி தங்கமணி (47) இந்தச் செயலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

ஏற்கெனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், மகள் பிரியதா்ஷினிக்கு ஆண் குழந்தை பிறக்கும் என நம்பியிருந்த நிலையில், மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. மருமகன் செல்வகுமாருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், குடும்பத்தை கவனிப்பதில்லை. இரண்டு பெண் குழந்தைகளை தனது மகளால் வளா்க்க முடியாது எனக் கருதி குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீஸாரிடம், தங்கமணி தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தங்கமணியைக் கைது செய்த பவானி போலீஸாா், அவரை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments