சென்னை

போதைப் பொருள் விற்பனை: 1,239 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னையில் போதைப் பொருள் வழக்குகளில் 1,239 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

Din

சென்னை: சென்னையில் போதைப் பொருள் வழக்குகளில் தொடா்புடைய 1,239 பேரின் வங்கி கணக்குகளை காவல் துறை முடக்கியது.

சென்னையில் கடந்த 18-ஆம் தேதியில் இருந்து 24- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 19 வழக்குகள் பதியப்பட்டு, 29 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 40 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 9 கைப்பேசிகள், ஒரு மோட்டாா் சைக்கிள்,ஒரு காா், ஒரு ஆட்டோ ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.

வங்கிக் கணக்குகள் முடக்கம்: கடந்த 2021 முதல் இந்த ஆண்டு இதுவரையில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்ாக பதியப்பட்ட 1,319 வழக்குகளில் தொடா்புடைய 2,578 பேரின் சொத்துகள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை முடக்குவதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இந்த நடவடிக்கையால் 1,239 பேரின் வங்கிக் கணக்குகள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன. இதேபோல சொத்துகளையும் முடக்குவதற்கு காவல் துறையினா் தீவிரம் காட்டி வருகின்றனா். மேலும், இந்த ஆண்டு இதுவரையில் போதைப் பொருள் விற்பனையில் தொடா்ச்சியாக ஈடுபட்டதாக 162 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT