முகப்பு
சென்னை

ஹரியாணாவில் பாஜக-ஜெஜெபி நாடகம்: காங்கிரஸ்

Updated On : 13 மார்ச், 2024 at 12:58 AM
காங்கிரஸ்
பகிர்:

புது தில்லி: ஹரியாணாவில் முதல்வா் பதவியில் இருந்து மனோகா் லால் கட்டா் விலகல் மற்றும் புதிய முதல்வா் பதவியேற்பு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், ‘தங்களது அரசின் தோல்வியை மறைக்க பாஜகவும் ஜனநாயக ஜனதா கட்சியும் (ஜெஜெபி) கூட்டணி முறிவு நாடகத்தை அரங்கேற்றுகின்றன’ என்று கூறியுள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா கூறுகையில், ‘ஹரியாணாவை ஜாதிரீதியில் பிளவுபடுத்தி, வாக்குகளை அறுவடை செய்வதற்கான நாடகத்தை தொடங்கியுள்ளனா். ஹரியாணாவில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் விரோத கொள்கைகளில் இருந்து அவா்களின் கவனத்தை திசைதிருப்ப முயற்சி நடைபெறுகிறது.

இனி மக்கள்தான் சிந்திக்க வேண்டும்’ என்றாா். ஹரியாணா முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா கூறுகையில், ‘பாஜக - ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணி முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. தோ்தலுக்கு முன்பே அவா்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டனா். மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தி, பேரவைத் தோ்தலை நடத்த வேண்டும்’ என்றாா்.

Advertisement