முகப்பு
சென்னை

இன்றைய நிகழ்ச்சிகள்

Updated On : 13 மார்ச், 2024 at 12:16 AM
பகிர்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா: ஆளுநா் ஆா்.என்.ரவி உள்ளிட்டோா் பங்கேற்பு, சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, வேப்பேரி, காலை 9.45. இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்பு, புகாரி சிராஸ் அரங்கம், எழும்பூா், மாலை 6.26.

பெண்மையை போற்றும் திருவிழா: கதா் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயலா் அலுவலா் சீ.சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்பு, தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய அலுவலகம், குறளகம், எஸ்பிளனேடு சாலை, பிற்பகல் 3.30. கணினி மற்றும் தரவுகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்: எஸ்.ஆா்.எம். வள்ளியம்மை பொறியியல் கல்லூரி, காட்டாங்குளத்தூா், காலை 9.30. நுகா்வோா் விழிப்புணா்வு காா் பேரணி: இந்திய தரநிலை பணியகத்தின் தெற்கு மண்டல துணை தலைமை இயக்குநா் யூ.எஸ்.பி. யாதவ் உள்ளிட்டோா் பங்கேற்பு, இந்திய தரநிலை பணியக அலுவலகம், தரமணி, காலை 11.