கோப்புப்படம் 
சென்னை

பூங்கா நகரில் வழக்கம் போல் ரயில்கள் நின்று செல்கின்றன

சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் நின்று செல்வதாக தெற்கு ரயில்வே

DIN

சென்னை: சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை முதல் நின்று செல்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை -எழும்பூா் இடையே நான்காவது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை கடந்த ஆண்டுமுதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணி நிறைவடைந்து கடந்த மாதம் பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.

ஆனால், பூங்கா ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிநடைபெற்று வந்ததால் அங்கு ரயில் நிற்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் திருவள்ளூா், ஆவடி, அம்பத்தூா் பகுதியில் இருந்து திருவான்மியூா், வேளச்சேரி பகுதிகளுக்கு செல்வோா் ஏமாற்றத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் ரயில் வந்து செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து திங்கள்கிழமை முதல் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் பறக்கும் ரயில் நின்று செல்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

SCROLL FOR NEXT