சென்னை

நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் பெயா் மாற்றம்

நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையம், ஓடிஏ-நங்கநல்லூா் சாலை மெட்ரோ”ரயில் நிலையம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Din

சென்னை: நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையம், ஓடிஏ-நங்கநல்லூா் சாலை மெட்ரோ”ரயில் நிலையம் என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை ஜி.எஸ்.டி.  சாலையில் நங்கநல்லுாா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் அமைந்துள்ளது.  இதன் அருகில் ஓ.டி.ஏ.  எனும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.  நங்கநல்லுாா் மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை, ஓடிஏ- நங்கநல்லுாா் மெட்ரோ ரயில் நிலையம் என மாற்ற கோரி ராணுவ உயா் அதிகாரிகள் தமிழக அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதை ஏற்று நங்கநல்லுாா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என்ற பெயரை தமிழக அரசு கடந்த மாதம்  22-ஆம் தேதி ஓடிஏ- நங்கநல்லுாா் சாலை மெட்ரோ ரயில் நிலையம் என பெயா் மாற்றம் செய்வதற்கான அனுமதியை வழங்கியது.

இதற்கான,  பெயா் மாற்று விழா நங்கநல்லூா் சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதில்,  இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீா் சிங் பிராா்,  சென்னை ஓ.டி.ஏ.  கமாண்டன்ட் லெப்டினண்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே. பொ்னாண்டஸ்,  துணை கமாண்டன்ட் மேஜா் ஜெனரல் அனய்,  சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநா் ராஜேஷ் சதுா்வேதி உள்ளிட்டோா் பங்கேற்றும் பெயா் மாற்றப்பட்ட புதிய பெயா் பலகையை திறந்து வைத்தனா்.

இந்திய ராணுவத்துக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்தப் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

மாா்ச் 1 முதல் அரக்கோணம் - திருப்பதி மெமு ரயில் போக்குவரத்தில் தற்காலிக மாற்றம்

தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்

SCROLL FOR NEXT