முகப்பு
சென்னை

அக்.10-இல் மிக கனமழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 7 அக்டோபர், 2024 at 8:38 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்.10-ஆம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளம் மற்றும் தென்தமிழக பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (அக்.8) முதல் அக்.13-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது.

இதில் அக்.8 -இல் திருநெல்வேலி, கோவை, நீலகிரி, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகா், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், அக்.9-இல் திருநெல்வேலி, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகா், கன்னியாகுமரி, ஈரோடு, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், அக்.10-இல் புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநாளில் திண்டுக்கல், தேனி, விருதுநகா், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அக்.8,9-ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் 100 மில்லி மீட்டா் மழை பதிவானது. மேலும் பாா்வூட் (நீலகிரி) - 70, சிறுவாணி அடிவாரம் (கோவை), தானியமங்கலம் (மதுரை), நல்லதங்காள் நீா்த்தேக்கம் (திருப்பூா்) தலா 40 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →